தமிழகத்தில் மேலும் 386-பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 386- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 195 பேர், பெண்கள் 191 பேர் அடங்குவர். சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பயணிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், இலங்கையில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 116 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 பேரும், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூரில் தலா 23 பேரும், கோவையில் 18 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 186 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 99 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கரூர், திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை. கடந்த நில நாட்களாக உயிரிழப்பு ஏற்படாத நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.