முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும்: அண்ணாமலை டுவிட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் குணமடைந்து நலம்பெற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-12 13:18 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைந்து நலம்பெற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்