த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கூத்தாநல்லூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கூத்தாநல்லூர்:
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த, பா.ஜனதா கட்சியை சேர்ந்த நுபுர்சர்மா மற்றும் நவீன்ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கூத்தாநல்லூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ஜெகபர்சாதிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டையில் த.மு.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர துணைத்தலைவர் மன்சூர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குத்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் நெய்னா முகமது, ஒன்றிய செயலாளர் ஹமீம், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய நுபுல்சர்மா, நவீன்ஜிண்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.