த.ம.மு.க. கொடியேற்று விழா
தென்காசியில் த.ம.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் போக்குவரத்து கழக தொழிற்சங்க தென்காசி கிளை கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தென்காசி கிளை தலைவர் எஸ்.சண்முகவேல், செயலாளர் மாரி தங்கம், பொருளாளர் பி.சண்முகவேல், கவுரவ தலைவர் மாடசாமி பாண்டியன், நெல்லை மண்டல பொதுச்செயலாளர் மகேந்திரன், மண்டல தலைவர் காடுவெட்டி முருகன், மண்டல பொருளாளர் தேவ இரக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.