திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கொடியேற்றம் நடந்தது.;

Update:2023-03-09 14:23 IST

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கொடியேற்றம் நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்