திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது

திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2023-04-16 17:12 GMT

திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

100 டிகிரி வெயில்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.இந்த நிலையில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கடந்த 13-ந்தேதி 100 டிகிரியும், 14-ந்தேதி 101.1 டிகிரியும் வெயில் அளவு பதிவாகியது. நேற்று முன்தினம் 97.5 டிகிரி பதிவாகியது. இதனால் வெயில் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று மீண்டும் 100.4 டிகிரி வெயில் அளவு பாதிவாகியது.

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் சாலையில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும், பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடியும் நடந்து செல்வதை காணமுடிந்தது.

சாலைகளில் கானல் நீர்

வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றியது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்