வீரவநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
வீரவநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பூமிநாதசுவாமி, மரகதாம்பிகை அம்பாள் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளிலும் சுற்றி பின்னர் நிலையம் வந்தடைந்தது.