திருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து
திருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருத்தணியிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 13-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து காலை 4 மற்றும் 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் வரும் 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 13-ம் தேதி அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியிலிருந்து காலை 4.30 மற்றும் 5.30 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரெயில் வரும் 12, 14 ஆகிய தேதிகளில் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.