கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ர உற்சவம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-08-29 18:58 GMT

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நித்திய பூஜை யாகமும், கலச பூஜையும் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் உற்சவர் மூர்த்திகள் மற்றும் புனிதநீர் கலசங்கள் திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அன்ன திருப்பாவாடை, வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை நடைபெற்று சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்