தேசிய அளவில் தங்கம் வென்ற திருப்பத்தூர் மாணவி - ஊரே கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு அவரது சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
தேசிய அளவிலான ஃபுளோர் பால் (FLOOR BALL) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவி திரிஷாவுக்கு அவரது சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடகாவில் படித்து வந்த பல்லாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திரிஷா, கர்நாடக அணிக்காக ஃபுளோர் பால் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிய மாணவி திரிஷாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கிராம மக்கள் மாணவியின் வெற்றியைக் கொண்டாடினர்.