திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள்
திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு சங்கத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான முதல் லீக் போட்டிகள் திருப்பத்தூர் தூய்நெஞ்சக் கல்லுரியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஏ. சுந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். இதில் கலெக்டர் அமர்னுகுஷ்வாஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர்களுக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் மாவட்ட அணியில் சேர்க்கப்பட்டு அங்கும் சிறப்பாக விளையாடினால் ரஞ்சி கோப்பை ஐ.பி.எல். அணிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது'' என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (பொது) துணை கலெக்டருமான வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் . தாசில்தார் சிவப்பிரகாசம், தூயநெஞ்சக் கல்லுரி உடற் கல்வி இயக்குனர் டாக்டர் பின்டோ தேவராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இந்த போட்டி தொடரில் முதல் பிரிவில் 10 அணிகளும், இரண்டாவது பிரிவில் 10 அணிகளும் விளையாடுகின்றன.
முதல் போட்டியில் மொன்ஸ்டர் கிரிக்கெட் கிளப் அணியும் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும்மோதின.