திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஏற்பாடுகள் அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வேலு பார்வையிட்டு அதிகாரிகளுடன்அமைச்சர் எ.வேலுநடத்தினார்.

Update: 2022-06-18 19:07 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வேலு பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசை நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா திருப்பத்தூர் டான்பாஸ்கோ மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விழா மேடை அமைக்கும் இடத்தையும், நலத்திட்ட உதவிகள் பெற உள்ள பயனாளிகள் அமரும் இடம், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் அனைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், நகரமன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் லோகநாதன், ஆம்பூர் நகரமன்ற துணை தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்