திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

வாணியம்பாடியில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-05-19 12:44 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அம்பூர்பேட்டை பாவடித்தோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசு பொன்னியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பூக்கடை பஜார், அரசமரத் தெரு, திருவள்ளூவர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

மாலையில் புஷ்ப கரக ஊர்வலம் கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. திருவிழாவையொட்டி வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்