திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி தாலுகா பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி தாலுகாவில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களைா கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது 17 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

Update: 2022-07-09 13:31 GMT

திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி தாலுகாவில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களைா கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது 17 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து அனைத்து பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறித்தியது.

அதன்படி பாதுகாப்பு விதி விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஓட்டிப் பார்த்து டிரைவர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

17 வாகனங்கள்

இதில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வின்போது வாகனங்களின் அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, மற்றும் மாணவர்கள் உட்காரும் இருக்கைகள் கைப்பிடிகள் முறையாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. 179 பள்ளி வாகனங்களில் 17 வாகனங்கள் சிறு குறைகளுக்காக திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்து பின்பு அலுவலக வேலை நாட்களில் ஆஜர் படுத்த அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்