திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
கள்ளக்குறிச்சியில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி;
கள்ளக்குறிச்சியில்
திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
கள்ளக்குறிச்சி, ஜன.8-
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அருகில் உள்ள ஸ்ரீ கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான திருப்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வைஷ்ணவி அறக்கட்டளை தலைவர் எஸ்.வினோத், உறுப்பினர்கள் சுப்பிரமணி, கல்கி நாராயணன், நாகராஜ், தேசிய ஆசிரியர் சங்க கோட்ட செயலாளர் கதிர்வேல், சதீஷ், மாவட்ட துணை தலைவர் வினோத் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்கள்.