திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
திருப்பத்தூரில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி இன்று நடக்கிறது.
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் முதல் 10 பாடல்கள், 6 முதல் 10-ஆம் வகுப்புவரை படிப்பவர்கள் 20 பாசுரங்கள், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவியர்கள் 30 பாசுரங்களை ஒப்புவிக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பை முன்னிட்டு 9443963761 என்ற செல்போன் எண்ணிலும் ஒப்புவிக்கலாம். ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தலா முதல் 3 பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்பவர்களுக்கு ஆறுதல் பரிசு, பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.