வேம்பு, அரசமரத்திற்கு திருக்கல்யாணம்

வேம்பு, அரசமரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-09-18 17:46 GMT

அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே அரசு, வேம்பு பின்னி இணைந்து தானாக மரமாக தோன்றி உள்ளது. இதை பார்த்த கிராமமக்கள் அரசமரத்தை சிவபெருமானாகவும், வேப்பமரத்தை அன்னை பார்வதி தேவியாகவும் நினைத்து திருக்கல்யாணம் நடத்தினர். இன்று பெண்கள் மேளதாளங்கள் முழங்க தேங்காய், பழங்கள், பட்டு துணிகள் உள்ளிட்டவற்றை தட்டுகளில் வைத்து அதனை சீர்வரிசை பொருட்களாக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். பின்னர் வேப்பமரத்திற்கும், அரசமரத்திற்கும் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்