மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

கோவில்பாளையத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-05-10 01:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. இரவு 11 மணிக்கு கிராம சாந்தி பூஜை, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஆபரண பெட்டி அழைத்து வருதல், சக்தி கலசம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 2.30 மணிக்கு பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மதுரை வீரன் சாமிக்கு அபிஷேக ஆராதனை, நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி திருவீதி உலா, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மகா அபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்