திருச்செந்தூரில் மின்கம்பங்கள் மீது டிப்பர் லாரி மோதியதால் மின்தடை

திருச்செந்தூரில் மின்கம்பங்கள் மீது டிப்பர் லாரி மோதியதால் வியாழக்கிழமை இரவு வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-08-18 15:32 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் மின்கம்பங்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் நேற்று ஒருநாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

டிப்பர் லாரி

திருச்செந்தூர் அருகே நடைபெற்று வரும் அனல்மின் நிலைய பணிக்காக அங்கு ஒரு டிப்பர் லாரி மணல் தட்டி விட்டு வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் தை சேர்ந்த முருகன் ஓட்டி வந்தார். மணல் தட்டிய லாரி, பின் உள்ள பகுதியை (டிப்பர்) கீழே இறக்காமல் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பைபாஸ் சாலையில் (பாரதியார் தெரு) வரும்போது லாரியின் பின்புறம் உள்ள பகுதி சாலையின் குறுக்கே உள்ள மின் ஒயரை இழுத்து சென்றது. பின்னர், அடுத்தடுத்த மின்கம்பங்களில் மோதியது.

மின்கம்பங்கள் சேதம்

இதில் 2 மின்கம்பங்கள் தரையில் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதன் அருகே நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சேதமடைந்தன. அப்போது அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அந்த சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சம்ப இடத்திற்கு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா நேரில் வந்து லாரி டிரைவர் முருகனிடம் விசாரணை நடத்தினார். டிப்பர் லாரி உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

மின்வினியோகம் பாதிப்பு

பின்னர் திருச்செந்தூர் உதவி மின் பொறியாளர் முத்துராமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் முழுவதும் அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பழுதுபார்ப்பு பணி முடிந்த நிலையில் அப்பகுதியில் இரவு 7.30 மணியளவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால் நேற்று திருச்செந்தூர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்