3 திருநங்கைகள் கைது
கும்பகோணத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த 3 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தை அடுத்த முகுந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். . அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 3 பேர் தமிழரசனிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தர மறுத்த தமிழரசனை திருநங்கைகள் 3 பேரும் சேர்ந்து தாக்கிவிட்டு தமிழரசன் சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழரசன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் தமிழரசனிடம் பணத்தைப் பறித்து சென்ற திருநங்கைகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.