அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம்

ஆலங்காயம் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-12 12:13 GMT

வாணியம்பாடி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கல்லாபாறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (வயது 59). இவர் மோட்டார்சைக்கிளில் ஆலங்காயம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில, கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். ஆலங்காயம் அருகே உள்ள கோமுட்டேரி அருகே சென்றபோது, எதிரே அபிமன்னன் (75) என்பவர் ஓட்டிவந்த மோடே்டார்சைக்கிள், குப்புசாமி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இதேபோல் வாணியம்பாடி திருமஞ்சோலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் (30) என்பவர் நிம்மியம்பட்டு அடுத்த முல்லை பகுதியில் அமைந்துள்ள புத்துகோவில் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது டிராக்டர் மோதியதில் அறிவழகன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஆலங்காயம் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்