சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா, விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் விழா, பெடரல் வங்கி சார்பில் பேட்டரி வாகனம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் எஸ்.பி.வள்ளி முருகன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், மாநில விவசாய அணி அமைப்பாளர் அப்துல் காதர், பெடரல் வங்கி மண்டல மேலாளர் நடராஜன், கிளை மேளாளர் நித்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர் பரமசிவன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு, விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினர். தொடர்ந்து பெடரல் வங்கி சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி ஆட்டோவை, நகராட்சி தலைவரிடம் ஒப்படைத்தார்.
நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், ஆறுமுகசாமி, பூல் பாண்டியன், மனோகர், இளைஞர் அணி முல்லை கண்ணன், நகராட்சி உறுப்பினர்கள் சந்திரன் அருணகிரி, ராஜ்குமார், கல்பனா அன்னபிரகாசம், ராமலட்சுமி, அந்தோணி சுதா, வள்ளியம்மாள், அம்சா பேகம், செல்வி, சிவஞானசண்முக லட்சுமி, ஜேம்ஸ், பாலன், தனலட்சுமி மாரியப்பன் அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.