அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-27 18:45 GMT

பஸ் கண்ணாடி உடைப்பு

கிருஷ்ணகிரி ஆலப்பட்டியை அடுத்த உஸ்தலஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). அரசு பேருந்து டிரைவர். இவர் நேற்று முன்தினம், பழையபேட்டை டவுன் பஸ் நிலையத்தில் இருந்து, அரசு பஸ்சை ஓட்டிக் கொண்டு, 5 ரோடு ரவுண்டானா பகுதியை நோக்கி சென்றார்.

பாப்பாரப்பட்டி என்ற இடத்தில் செல்லும் போது, கிருஷ்ணகிரி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் என்கிற சுக்குகாபி (24) என்ற வாலிபர் மதுபோதையில் பஸ்சை வழிமறித்தார்.

வாலிபர் கைது

இதனால் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, ஹாரன் அடித்தார். மேலும் அவரை விலகி செல்லும் படி கூறினார். ஆனால் தியாகராஜன் அங்கிருந்த செல்லாமல், கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து உடைத்தார்.

பின்னர் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாக திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் தியாகராஜனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்