100 நாள் வேலை திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல்; பா.ஜ.க. பிரமுகர் கைது

வேடசந்தூர் அருகே 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-12 21:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 39). இவர், 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக உள்ளார்.

இந்தநிலையில் அம்பிகா, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான மோடி பிரசாத் (வயது 40) என்பவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோடி பிரசாத்தை கைது செய்தனர்.

இதற்கிடையே மோடி பிரசாத் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க.வினர் ஏராளமானோர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்