ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை ஆயிரம் விளக்கு, ஆழ்வார் பேட்டை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட ஆண்டர்சன் சாலையில் 13-6-2022 (இன்று) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கல்லூரி சாலை, பாந்தியன் சாலை, எத்திராஜ் சாலை, கிரீம்ஸ் சாலை, ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
இதேபோல், ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் கே.பி.தாசன் சந்திப்பில் மழை நீர் கால்வாய் பணி நடைபெறுவதால், இன்று முதல் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.