ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்ட தாய்தமிழர் கட்சியின் சார்பில் தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டு கொள்ளாததை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு, வரிச்சுமை ஆகியவற்றை கண்டித்தும் ரெயில்நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ரெயில்நிலையத்தை தலைவர் பாண்டியன் தலைமையில் முற்றுகையிட முயன்றனர். இதில், பொது செயலாளர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் சேதுமுனியசாமி, துணை பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் திரளாக ரெயில்நிலையத்தை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை வழிமறித்து 42 பேரை கைது செய்தனர்.