10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டுகோள்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-30 19:33 GMT

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும், "my Aadhaar portal", www.myaadhaar.uidai.gov.in என்ற இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் (தாசில்தார் அலவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம்) அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை (வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய கடவுச்சீட்டு போன்றவற்றை) நேரில் தாக்கல் செய்து புதுப்பித்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டைைய புதுப்பிக்க முதல் கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை செந்துறை தாலுகாவில், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தத்தனூர் வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட முகாம்களை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்