பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

Update: 2023-06-07 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த சமூகநல சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன்படி தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்டு உள்ளவாறு பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000- ரொக்கப் பரிசுடன் 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 10-ந் தேதிக்குள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்