தேசிய உயரம் தாண்டும் போட்டியில் தூத்துக்குடி மாணவிக்கு வெண்கல பதக்கம்
தேசிய உயரம் தாண்டும் போட்டியில் தூத்துக்குடி மாணவி வெண்கல பதக்கம் வென்றார்.
தூத்துக்குடி:
தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு பெடரேஷன் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் நடந்தது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி சஹானா கலந்து கொண்டார். அவர் 1.64 மீட்டர் உயரம் தாண்டி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
சாதனை படைத்த மாணவி சஹானாவை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்டரிக், மாவட்ட தடகள செயலாளர் பழனிச்சாமி, வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் ஆகியோர் பாராட்டினர்.