தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு -அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Update: 2022-08-30 03:22 GMT

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்தப் பரிந்துரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்