தூத்துக்குடி: நெய்தல் கலை விழாவை காண அனைவரும் வாருங்கள் - கனிமொழி அழைப்பு

தூத்துக்குடியில் நடைபெற உள்ள நெய்தல் கலை விழாவை காண பொதுமக்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என கனிமொழி எம்.பி., அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-07-05 12:25 GMT

நெய்தல் கலை விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு கனிமொழி எம்.பி. ஆலோசனைகளை வழங்கினார்

தூத்துக்குடி,

நெய்தல் கலை விழா குறித்து கனிமொழி எம்.பி. உற்சாகத்துடன் கூறியதாவது,

தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், 'ஸ்பிக்' நிறுவனமும் இணைந்து 'நெய்தல்- தூத்துக்குடி கலை விழா' நடைபெறுகிறது. தமிழர்களின் மண் சார்ந்த கிராமிய கலைஞர்களை இணைக்கும் விழாவாகவும் இது இருக்கும்.

இந்த விழாவை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இவ்விழாவில் பாரம்பரிய உணவுத்திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கை தமிழர்களின் உணவு வகைகளும் இடம் பெறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பல்வேறு புத்தகங்களுடன் கூடிய புத்தக அரங்கமும் இடம் பெறுகிறது.

இந்த விழா வெற்றி பெற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்