குமரிக்கு இந்த ஆண்டுகூடுதல் பறவைகள் வந்துள்ளன

குமரிக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பறவைகள் வந்துள்ளதாக பறவை கணக்கெடுப்புக்கு பிறகு மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறினார்.

Update: 2023-01-29 18:45 GMT

நாகர்கோவில்,

குமரிக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பறவைகள் வந்துள்ளதாக பறவை கணக்கெடுப்புக்கு பிறகு மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறினார்.

பறவைகள் கணக்கெடுப்பு

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 பருவ மழைகள் பெய்வதால் இங்குள்ள நீர்நிலைகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவு, பாதுகாப்பு மற்றும் புகலிடம் தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம். பொதுவாக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பறவைகள் வருகை அதிகமாக இருக்கும்.

அவ்வாறு வரும் பறவைகளில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு வந்து உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

20 இடங்களில்...

அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பை 3 கட்டமாக நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதைத்ெதாடர்ந்து முதற்கட்ட கணக்கெடுப்பு நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணி புத்தளம், தேரூர், சுசீந்திரம், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்பட 20 இடங்களில் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரை நடந்தது. ஒவ்வொரு இடங்களிலும் 2 பேர் வீதம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கூலக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டது. இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பு எடுத்துக் கொண்டனர். கணக்கெடுப்பு பணியை புத்தளம் மற்றும் தேரூர் பகுதிகளில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

கூடுதல் பறவைகள்

தொடர்ந்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும். சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. பறவைகள் ஆர்வலர்கள், வன ஊழியர்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டன. அங்கு பூநாரை பறவைகள் அதிகளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டன.

கடந்த ஆண்டு 82 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம் பெயர தொடங்கியுள்ளன. அவை ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளன். தற்போது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப்பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனை தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும் 

Tags:    

மேலும் செய்திகள்