திருவிழந்தூர் பரிமள ெரங்கநாதர் கோவில் தேரோட்டம்

காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருவிழந்தூர் பரிமள ெரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-11-16 18:45 GMT

காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருவிழந்தூர் பரிமள ெரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

துலா உற்சவம்

108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமாகவும் திருவிழந்தூர் பரிமள ெரங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது.இந்த கோவிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பரிமள ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்திகோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தீர்த்தவாரி

நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து மதியம் பரிமள ெரங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்