சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தைப்பூசத்தையொட்டி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் சீதளா தேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சீதளாதேவி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.