முளைப்பாரி ஊர்வலம்

தொண்டி அருகே முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.;

Update:2022-08-04 22:56 IST

தொண்டி,

தொண்டி தெற்கு தோப்பு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தொண்டி சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து வேல் காவடி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். பின்னர் முளைக் கொட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தொண்டி தீர்த்தக்கரைக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடை பெற்றது. ஏற்பாடுகளை தொண்டி தெற்கு தோப்பு கிராம தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்