திருவையாறு புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-10-24 21:00 GMT

திருவையாறு:

செயல்வீரர்கள் கூட்டம்

திருவையாறு சட்டமன்ற தொகுதி பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் திருவையாறில் நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அரசூர் ஆறுமுகம், கனகராஜ், உழவர் பேரியக்க பொறுப்பாளர் முன்னரசு, மந்திரி என்கின்ற முகமது கான், சந்திரசேகர், கோபி, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கர்ணன் வரவேற்றார்.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருமான ம.க.ஸ்டாலின், உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பா.ம.க. மாவட்ட தலைவர் வக்கீல் சங்கர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் மதி. விமல், ராம்குமார் மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் மணி. சந்திரசேகர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மகளிர் உரிமை தொகை

திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் கிளைக் கூட்டம் நடத்தி பா.ம.க. கொடியேற்றுவது, திருவையாறு பகுதியில் விளைவிக்கும் வாழைப்பயிர்கள் மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் மிகவும் சேதமாகிறது.

மாவட்ட நிர்வாகம் இன்சூரன்ஸ் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சேதமாகும் வாழை பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

புறவழிச்சாலை அமைக்கும் பணி

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும், திருவையாறு புறவழிச்சாலை பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்