ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.;
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோவை துடியலூரில் உள்ள பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் இல்லம் , அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் . சென்னை மற்றும் கோவையில் அதிகாலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகிறது.