கர்ப்பிணி உதவித்தொகை விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம்

Update: 2022-06-18 16:47 GMT


முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதி உதவியாக ரூ.18 ஆயிரம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். மாநகர பகுதியில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அந்தந்த சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலித்து தகுதியான விண்ணப்பங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கணினியில் செவிலியர்கள் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கணினியில் இணையதள சர்வரில் பிரச்சினை ஏற்பட்டதால் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில், கணினியில் செவிலியர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

மேலும் செய்திகள்