திருச்செந்தூரில்திருப்பாவை,திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி
திருச்செந்தூரில்திருப்பாவை,திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி 4-ந் தேதி வரை (தமிழ் மாதம் மார்கழி 1 முதல் 20-ந் தேதி வரை) தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்செந்தூர் சுற்று வட்டார பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.