திருமேனி நாதர் கோவில் தேரோட்டம்
திருச்சுழி திருமேனிநாதர் கோவில் தேேராட்டம் நடைபெற்றது.
திருச்சுழி,
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து துணைமாலையம்மனுக்கும், திருமேனிநாதருக்கும் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை, காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.