வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திமிரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது.

Update: 2023-09-20 13:27 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கோட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து திருமஞ்சனம் செய்யப்பட்டது. கும்ப தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபங்கள் காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்