திருக்கோவிலூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12-ந் தேதி நடக்கிறது

திருக்கோவிலூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-12-06 18:45 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 10-ந்தேதி மாலை 4 மணியளவில் விக்‌னேஷ்வர பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து 11-ந்தேதி மகா சாந்தி அபிஷேகம், யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. 12-ந்தேதி காலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜையும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் 8.30 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், உபயதாரர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்