கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் திருக்குறள ஒப்புவித்தல் போட்டி

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் திருக்குறள ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது

Update: 2023-05-17 17:07 GMT

கண்ணமங்கலம் 

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் திருக்குறள ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் மாவட்ட நூலகக்குழு ஆலோசனைப்படி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் கோடைக் கொண்டாட்ட போட்டிகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. கிளை நூலகர் சிவசங்கரன் வரவேற்று பேசினார்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர்கள் வேலு, வி.கார்த்திகேயன், வாசகர்கள் ஆர். மணிகண்டன், எம் லட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற 13 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்