குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்-சீர்வரிசை எடுத்து பெண்கள் ஊர்வலம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்்தது. இதையொட்டி பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Update: 2023-04-11 18:45 GMT

குன்னூர்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்்தது. இதையொட்டி பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

திருக்கல்யாணம்

குன்னூர் மேல் கடை வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தேர்த்திருவிழாவை குன்னூரில் உள்ள பல்வேறு சமுதாயத்தினர் உபயமேற்று நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று அம்மன் திருக்கல்யாணம், வேப்ப மர வாகன உற்சவம் நடைபெற்றது. காலை 7 மணியளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 11 மணியளவில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்வரிசை ஊர்வலம்

தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் சந்தான வேனுகோபால் கோவிலில் இருந்து சீர் வரிசை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் அம்மனுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்பு வகைகள் தட்டுகளில் ஏந்தியவாறு, மேள தாளம் முழங்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதில், நாகேஸ்வரி என்ற பெண் மாங்கல்ய பொருட்களை புடை சூழ எடுத்து வந்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் வேப்ப மர வாகனத்தில் திரு வீதி உலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்