எடப்பாடி கோரணம்பட்டியில் அதிர்ஷ்டலட்சுமி கோவிலில் திருக்கல்யாணம்

எடப்பாடி கோரணம்பட்டியில் உள்ள அதிர்ஷ்டலட்சுமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-11-22 20:40 GMT

சேலம், 

எடப்பாடி அருகே கோரணம்பட்டி கிராமம் எட்டிக்குட்டை மேடு பஸ் நிறுத்தம் அருகே 16 லட்சுமிகள் அருள் பாலிக்கும் அதிர்ஷ்டலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மகாலட்சுமி, மகாவிஷ்ணுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கு கோவில் ஸ்தாபகர் தண்டபாணி தலைமை தாங்கினார். திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறும் போது, 'திருக்கல்யாண வைபோகத்தில் திருமண தோஷம், திருமண தடை உள்ள 108 நபர்களுக்கு பரிகாரம் செய்து கலச அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் மதியம் 12 மணிக்கு மேல் சிறப்பு மகாயாகம் நடைபெறும்.

இதில் பங்கேற்பவர்களுக்கு தொழிலில் ஏற்படும் பணத்தடைகளை நீக்கி செல்வத்தை பெருக்கும் தனாகர்ஷண திலகம் வழங்கப்படும். பவுர்ணமி தினத்தன்று இரவு 6.10 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்' என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்