அஷ்ட வராகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

வசந்த பஞ்சமி உற்சவ விழாவை முன்னிட்டு அஷ்ட வராகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-01-28 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் சாலாமேட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அஷ்டவராகியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு 13-வது வசந்த பஞ்சமி உற்சவ விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 22-ந் தேதி எல்லை கட்டுதலும், 23-ந் தேதி ஸ்ரீவிநாயகர் பூஜை, அய்யனார் பூஜையும், 24-ந் தேதி கோ பூஜை, இந்திர பூஜை, சப்த கன்னி பூஜையும், 25-ந் தேதி 63 சக்தி கரகம் வீதியுலா, ஸ்ரீவராகி வீதியுலா, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வராகி சகஸ்ர நாம பூஜைகளும் நடந்தது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஸ்ரீ சூக்த பூஜை, சுமங்கலி பூஜையும், பகல் 12 மணிக்கு உழவர்கள் பூஜையும், மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், இரவு 8.30 மணிக்கு ஸ்ரீவராகி ஸ்ரீ பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு திருப்பள்ளி பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீவராகி பைரவர் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு 63 சக்திகள் விடையாற்றி விழாவும், இரவு 9 மணிக்கு கும்பம் கொட்டுதலும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்