திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா

நெல்லை சந்திப்பு திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நடந்தது.

Update: 2022-06-18 19:38 GMT

நெல்லை:

நெல்லை சந்திப்பு இருதயநகர் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் மறைமாவட்ட முதல்வர் சாக்கோ வர்கீஸ், பங்குத்தந்தை மைக்கேல்ராசு, சரணாலய இயக்குனர் ஞானதினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு நற்கருணை பவனியும், 24-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சப்பரபவனியும் நடக்கிறது. 25-ந் தேதி (சனிக்கிழமை) புதுநன்மை விழா நடக்கிறது. இதில் பிஷப் அந்தோணி சாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்துகிறார். 26-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

இதேபோல் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அங்கும் திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்