திரியம்பகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

திரியம்பகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-11-22 19:30 GMT

அரூர்:-

அரூர் அருகே பெத்தூர் லட்சுமண நாராயண கோவில் வளாகத்தில் திரிபுரசுந்தரி உடனுறை திரியம்பகேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. கார்த்திகை, ரோகிணி, சந்திரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு குடங்கள் புறப்பாடும், கோவில் கோபுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தம் ஊற்றப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்