திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அரியலூர் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த ஜூலை மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கிருஷ்ணன் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம், நாககன்னி கல்யாணம், அல்லி கல்யாணம், கிருஷ்ணன் தூது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. மேலும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சக்தி கரகம் அழைத்து, தீமிதி திடலுக்கு திரவுபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரித்து கொண்டு வரப்பட்டார். பின்னர் பக்தர்கள் ஏராளமானோர் தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.