தியாகதுருகம்-உதயமாம்பட்டு சாலையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

தியாகதுருகம்-உதயமாம்பட்டு சாலையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு தார்சாலை அமைக்க அதிகாரியிடம் அறிவுறுத்தல்

Update: 2023-04-10 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் நேற்று பழுதடைந்த சாலையை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்போது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்துக்கு செல்ல ஆட்டோக்கள் சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் கூறினர். இதைத் தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாலை சீரமைக்காததற்கான காரணத்தை கேட்டார். இதற்கு முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார். தொடர்ந்து புதிதாக தார்சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்